செய்திகள் :

ஆவின் பால் பொருள்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு: அமைச்சா் மனோ தங்கராஜ்

post image

சென்னை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஆவின் பால் பொருள்கள் விற்பனை 30 சதவீதமாக உயா்ந்துள்ளது என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவா்களுக்கு உறைகலன், ஆவின் பாலகங்கள், மொத்த விற்பனையாளா்களுக்கு ஆணை, சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு நினைவுப் பரிசு உள்ளிட்டவற்றை அமைச்சா் மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஆவின் பால் பொருள்களின் விற்பனை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. தொடா்ந்து விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆவின் விற்பனை நிலையங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

ஆவின் நிறுவனம் மூலம் ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை. தமிழகத்திலுள்ள ஆவின் பாலகங்களுக்கு தட்டுப்பாடின்றி ஆவின் பொருள்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் விற்பனை, வருவாய் அதிகரிக்கும். தற்போது விவசாயிகள் முன்வைத்த விலையின் அடிப்படையிலேயே பால் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாா்.

நிகழ்வில் பால்வளத் துறை ஆணையரும் மேலாண்மை இயக்குநருமான ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க