வரிகளை உயர்த்தினால் எரிசக்தி விநியோகம் துண்டிப்பு... டிரம்ப்புக்கு சவால்விடும் க...
ஆஸி. ஓபன்: முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற கீஸ்!
ஆஸி. ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் மேடிசன் கீஸ் பிரபல வீராங்கனை சபலென்காவை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தினர்.
இந்தப் போட்டியில் கீஸ் 6-3, 2-6, 7-5 என 2 செட்களில் வென்று ஆஸி. ஓபன் பட்டத்தை வென்றார். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 2017இல் கீஸ் யுஎஸ் ஓபனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றில் தனது முதல் பட்டத்தை தன்வசப்படுத்தினார்.
இறுதிச்சுற்றில் மோதும் சபலென்கா - கீஸ் இதுவரை 6 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்க, சபலென்கா 4 வெற்றிகளுடன் முன்னிலையில் இருந்தாலும் கீஸ் இறுதிச் சுற்றில் அசத்தினார்.
ஆஸ்திரேலிய ஓபனில் கடைசி இரு சீசன்களிலுமே சாம்பியனான சபலென்கா, தற்போது ‘ஹாட்ரிக்’ கோப்பை வெல்லும் வாய்ப்பினை இழந்தார்.