ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை என்பதில் உண்மையில்லை: ஜெ.பி.நட்...
இட்லி கடை வெளியீட்டில் மாற்றம்?
இட்லி கடை படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இதில், இட்லி கடை படத்தை அவரே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: இரண்டு பாகமாக உருவாகும் கார்த்தி - 29?
படம் வருகிற ஏப்.10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே தேதியில் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாகவுள்ளது.
இதனால், இட்லி கடை வெளியீட்டில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை ஆகஸ்ட் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தனுஷ் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.