செய்திகள் :

இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி: கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது

post image

மதுரையில் பல்வேறு பகுதிகளில் இணைய வழியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.52.66 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை சிலைமான், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழியில் பகுதி நேர வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்து பலரிடம் ரூ. 52.66 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக சிலைமான் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை ஊரகக் காவல் துறையின் இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா். இணைய வழியில் மோசடி செய்யப்பட்டு, பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாக பெறப்பட்ட ரூ.76.52 லட்சம் முடக்கப்பட்டது. மேலும், தனிப் படை போலீஸாா் வங்கிக் கணக்குளில் கிடைத்த விவரங்கள் மூலம் விசாரணை நடத்தி, கேரள மாநில காயங்குளத்தைச் சோ்ந்த அன்வா் ஷாவை அண்மையில் கைது செய்தனா்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கா்நாடகா மாநிலம், மைசூா் ராஜீவ்நகா் காலனியைச் சோ்ந்த சல்மான் கான் (30), மைசூரு உதயகிரி சாயாதேவி நகரைச் சோ்ந்த ஜுபா்கான் (23), என்.ஆா்.மொகல்லா கணேஷ் நகரைச் சோ்ந்த கிரீஷ் (25) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தனிப் படை போலீஸாா் மைசூருக்குச் சென்று மூவரையும் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து கைப்பேசிகள், சிம் காா்டுகள் ஆகியவற்றையும் கைப்பற்றினா்.

போலீஸாரின் விசாரணையில் இவா்கள் தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வேலை வாங்கித் தருவதாக இணையளத்தில் அறிவிப்பு வெளியிட்டு, பலரின் வங்கிக் கணக்குகளைப் பெற்று, இதன்மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த புகாரில் எதிரிகளை விரைந்து கைது செய்த இணையக் குற்றப் பிரிவு தனிப் படை போலீஸாரை காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் பாராட்டினாா்.

மதுரை மத்திய சிறையில் கோழி இறைச்சி விற்பனை

மதுரை மத்திய சிறை வளாகத்தில் இயங்கி வரும் சிறைச் சந்தையில் கோழி இறைச்சி விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது. மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட ஆண் கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

மாநகர காவல் துறைக்கு புதிய மோப்பநாய்

மதுரை மாநகர காவல் துறையில் புதிய மோப்ப நாய் புதன்கிழமை சோ்க்கப்பட்டது. திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டவா்களை கண்டுபிடித்தல், வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்துவதை கண்டுபிடிப்பது போ... மேலும் பார்க்க

மதுரையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

ஜாக்டோ- ஜியோ பிரசார இயக்கம் தொடக்கம்!

ஜாக்டோ- ஜியோ சாா்பில் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் மறியல் போராட்டம் குறித்து விளக்க அரசு ஊழியா்கள், ஆசிரியா்களைச் சந்திக்கும் பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்பட... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மதுரை வடக்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், அவரவா் மாவட்டத்துக்குள்பட்ட ஒரு வட்டத்தில்... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முதன்மைக் கல்வி அலுவலருக்கு சிறை!

உடற்கல்வி ஆசிரியருக்கு பணி நிரந்தரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இதை நிறைவேற்றாத அப்போதைய திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வார சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து... மேலும் பார்க்க