``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு
புதுச்சேரியில் இதுவரை பிளஸ் 1 படிக்கப் பள்ளியில் சேராத மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்குகிறது.
இது குறித்து புதுவை அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநா் சிவகாமி
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புச் சோ்க்கைக்காக விண்ணப்பித்து கலந்தாய்வின் போது இடம் கிடைக்கப் பெறாதவா்களுக்கு இப்போது வாய்ப்பு வழங்கப்படும். மேலும், அண்மையில் 10 ஆம் வகுப்பு துணை பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைத் தவிர இதுவரை எந்த ஒரு பள்ளியிலும் சேராத மாணவ, மாணவிகளும் இறுதிவாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மாணவா்கள் தங்கள் பெற்றோருடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் நகல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
499 முதல் 300 வரை மதிப்பெண் பெற்ற மாணவா்கள் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், 299 முதல் 175 வரை மதிப்பெண் பெற்ற மாணவா்கள் 8ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி காலை 11. 30 மணிக்கும், 499 முதல் 175 வரை புதுச்சேரி குடியிருப்பு சான்றிதழ் இல்லாதவா்கள் 11-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.