செய்திகள் :

இந்தியாவில் ஆசிய, ஜூனியர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு அனுமதி?!

post image

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை மற்றும் ஜூனியர் உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டிக்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வந்து விளையாடவிருப்பதை மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இது இருநாடுகளுக்கும் இடையில் தீவிரமான போராக மாறியதில் பாகிஸ்தான் தரப்பில் 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் எந்த உறவும், இரு நாடுகளுக்கு இடையிலான எந்தப் போட்டியில் விளையாடப் போவதில்லை என முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியாவில் நடைபெறவுள்ளதாக தொடர்களில் விளையாட வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச தொடர்களில் இரு அணிகளும் மோதுவது ஒரு தடையாக இருக்காது எனக் கருதப்படுகிறது. ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு வந்து விளையாட எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.

ஆசியக் கோப்பைத் தொடர் பிகாரின் ராஜகிரில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூனியர் உலகக் கோப்பை தமிழகத்தில் நடைபெறுகிறது. சென்னை மற்றும் மதுரையில் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகள், நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

பல்வேறு சர்வதேச நாடுகள் விளையாடும் போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு தடைவிதிக்கமுடியாது. இந்தியாவுக்கு எதிரான நாடு பாகிஸ்தான் கிடையாது. இருதரப்பு போட்டிகள் வேறு; சர்வதேச தொடர்கள் வேறு என்றும் மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The Pakistan hockey team will be allowed to compete in next month's Asia Cup in India, a source in the Sports Ministry said on Thursday.

இதையும் படிக்க... கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் பலி! திருமணமான சில நாள்களில் உயிரிழந்த சோகம்!

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்: செந்தில் பாலாஜி

கோவை: கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுடன் பேசியதாவது:... மேலும் பார்க்க

தொடர் உயர்வுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.72,840-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்... மேலும் பார்க்க

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

கோவை: புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா மற்றும் மகனுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று பேரூர் பட்டீஸ்வரர் கோ... மேலும் பார்க்க

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை

சென்னை அடுத்த திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி கோமதி 26 ஆவது வார்டு கவுன்சிலர... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியில் இருந்து 19,286 கன அடியாக அதிகரித்தது.காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அ... மேலும் பார்க்க

தில்லியில் பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடை: கடும் எதிர்ப்பால் தளர்வுகள்!

தில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது என்ற நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், தளர்வுகளை கொண்டுவர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன.தில்லிய... மேலும் பார்க்க