கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
இந்தியா - இங்கிலாந்து மோதலால் ஆஷஸ் தொடரில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கான ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட் விற்பனை அதிகரிக்குமென கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் (ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி) இங்கிலாந்து 2-1 முன்னிலை வகிக்கிறது.
ஒவ்வொரு டெஸ்ட்டிலும் இரு அணிகளுக்கும் எதாவது மோதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால், பார்வையாளர்கள் அதிகரித்துள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பரில் நடைபெற இருக்கிறது.
அதிக டிக்கெட்டுகள் விற்பனை
இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி டாட் கிரீன்பெர்க் கூறியதாவது:
ரசிகனாக பார்க்கும்போது ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி சுவாரசியமாக இருக்கிறது.
இங்கிலாந்து வீரர்கள் வரும்போது அனைவருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் விளையாடும் விளையாட்டு பிடித்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் அவர்கள் என்னச் செய்யப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆஷஸ் தொடரில் அதிகமான டிக்கெட்டுகள் விற்கும். அது பேசுபொருளாக மாறுமென நினைக்கிறோம் என்றார்.
வரலாறு படைக்க காத்திருக்கும் ஆஷஸ்
ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் அதிகபட்சமாக 1936-37 ஆஷஸ் தொடரில் 9, 46,750 டிக்கெட்டுகள் விற்பனையானது. அப்போது டான் பிராட்மேன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
ஆஷஸ் அல்லாத போட்டிகளில் 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் அதிகமான டிக்கெட்டுகள் (8,37,879 ) விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையை வரும் ஆஷஸ் முறியடிக்குமென கிரிக்கெட் ஆஸி. நிர்வாகி கூறியுள்ளார்.
ஏற்கெனவே, காபா, அடிலெய்டு, ஓவல், சிட்னி டெஸ்ட்டுகளின் முதல் 3 நாள்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது கவனிக்கத்தக்கது.