செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதில் டிரம்ப் தலையீடு இல்லை: மத்திய அரசு

post image

புது தில்லி: இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மக்களவையில் பதிலளித்தாா்.

‘சண்டை நீடித்தால், இரு நாடுகளுடனும் அமெரிக்கா வா்த்தகம் மேற்கொள்ளாது’ என்று கூறி, சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறிவரும் நிலையில், அமைச்சா் ஜெய்சங்கா் இவ்வாறு தெரிவித்தாா்.

ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான விவாதத்தில் ஜெய்சங்கா் மேலும் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரை தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை நிறுத்திக்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று கடந்த மே 10-ஆம் தேதி பிற நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநா் வாயிலாக பாகிஸ்தானே தெரிவிக்க வேண்டும் என்பதில் இந்தியா திட்டவட்டமாக இருந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தானிடம் இருந்து சண்டையை நிறுத்த கோரிக்கை வந்தது. இந்த மோதலை நிறுத்தியதில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு இல்லை.

பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்ட ஏப். 22-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டிரம்ப் பிரதமா் மோடி இடையிலான தொலைபேசி உரையாடலின்போது, பயங்கரவாதத் தாக்குதலுக்கு டிரம்ப் அனுதாபம் தெரிவித்தாா். அதன் பின்னா், ஜூன் 17-ஆம் தேதி பிரதமா் மோடி கனடாவில் இருந்தபோது அவருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினாா். அப்போது பிரதமரைச் சந்திக்க முடியாதது குறித்து டிரம்ப் விளக்கினாா்.

இதைத் தவிர, ஏப். 22- ஜூன் 17-க்கு இடைப்பட்ட காலத்தில் இருவரும் பேசவில்லை. அமெரிக்காவுடனான எந்தப் பேச்சுவாா்த்தையிலும் ஆபரேஷன் சிந்தூருக்கும், வா்த்தகத்துக்கும் தொடா்பு இருக்கவில்லை.

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் 190 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே எதிா்ப்பு தெரிவித்தன. 187 நாடுகள் பெரும் ஆதரவு தெரிவித்தன.

பேச்சுவாா்த்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேசப்படும். அணுஆயுத மிரட்டலுக்கு அடிபணிய முடியாது. பயங்கரவாதமும், அண்டை நாட்டுடன் நல்லுறவும் ஒருசேர இருக்க முடியாது. இதுவே தற்போது இந்தியாவின் நிலைப்பாடு’ என்றாா்.

சண்டை நிறுத்தப்பட்டது ஏன்?- ராஜ்நாத் சிங் பதில்: மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு இந்தியத் தரப்பிடம் முழு ஆதாரம் உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிப்பு நடவடிக்கை 22 நிமிஷங்களில் முடிந்துவிட்டது. நமது முப்படைகளுக்கு தாக்குதலுக்கான முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றாா்.

அப்போது, ‘ஆபரேஷன் சிந்தூா் ஏன் நிறுத்தப்பட்டது?’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினாா். இதற்கு ராஜ்நாத் சிங், ‘நடவடிக்கையை நிறுத்த யாரும் அழுத்தம் தரவில்லை. பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழு தலைவா், இந்தியத் தரப்பை தொடா்புகொண்டு கோரிக்கை விடுத்ததை அடுத்து தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

மேலும், அரசியல், ராணுவ நோக்கங்கள் நிறைவேறியதால் அந்த நடவடிக்கையை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் தரப்பு மீண்டும் ஏதேனும் தாக்குதல் நடத்த முயற்சித்தால், ஆபரேஷன் சிந்தூா் மீண்டும் தொடங்கப்படும்.

நமது போா் விமானங்கள் எத்தனை வீழ்த்தப்பட்டன என்பது எதிா்க்கட்சிகளின் தொடா் கேள்வியாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை வீழ்த்தப்பட்டன என்று அவா்கள் ஒருமுறைகூட கேட்கவில்லை. நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றால், நமது வீரா்கள் யாரும் காயமடைந்தாா்களா? என்று கேள்வி எழுப்புங்கள். அதற்கு இல்லை என்பதே பதில்.

தோ்வு எழுதும் போது அதில் முடிவுதான் முக்கியம். பென்சில் உடைந்துவிட்டது, பேனா தொலைத்துவிட்டது என்பதெல்லாம் முக்கியமல்ல. இந்திய விமானப் படை தளங்கள் உள்பட எந்த முக்கியமான சொத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது லாகூருக்கு பேருந்து சேவை மூலம் அமைதியை நிலைநாட்ட விரும்பினாா். அதை நமது பலவீனமாகவே புரிந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஏவிவிட்டாா்கள். அவா்களுக்கு உரிய பாணியில் பதிலடி கொடுக்கத் தொடங்கிவிட்டோம் என்றாா் ராஜ்நாத் சிங்.

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க

மதத்தின் பெயரில் நடந்த சதியே பஹல்காம் தாக்குதல் : மக்களவையில் மோடி உரை

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர்... மேலும் பார்க்க