இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.30-ஆக முடிவு!
மும்பை: பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 2 காசுகள் உயர்ந்து ரூ.87.30 ஆக நிலைபெற்றது.
உள்நாட்டு சந்தைகளின் பலவீனமான போக்கும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததாலும், இந்திய ரூபாய் மீதான அழுத்தம் தொடர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.38 ஆக தொடங்கிய பிறகு இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரூ.87.27 ஆகவும் பிறகு குறைந்தபட்சமாக ரூ.84.40ஆக வர்த்தகமான நிலையில் முடிவில் இரண்டு காசுகள் உயர்ந்து ரூ.87.30-ஆக முடிந்தது.
இதையும் படிக்க: அசோக் லேலண்ட் விற்பனை 2% உயா்வு