'இனி Unreserved-ல் 150 டிக்கெட்கள் மட்டும் தான்...' - இந்திய ரயில்வேயின் புதிய அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை, ரயில் பயணங்களில் புதிய புதிய மாற்றங்களைத் தொடர்ந்து அறிவித்து வருகின்றது.
டிக்கெட் புக்கிங் நாள் குறைப்பு, ஆதார் இணைப்பு... வரிசையில், தற்போது லேட்டஸ்டாக வேறொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வெறும் 150 டிக்கெட்டுகள்...
அதன் படி, இனி முன்பதிவு இல்லா பெட்டிகளில், தலா ஒரு பெட்டிக்கு வெறும் 150 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். இதுவரை, இந்த டிக்கெட்டுகளுக்கு இப்படி கட்டுப்பாடுகள் இருந்ததில்லை.
சோதனை முயற்சியாக, இந்த நடைமுறை முதன்முதலாக புது டெல்லியில் மட்டும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
ரயில்வே துறையின் இந்த அறிவிப்பிற்கு முக்கிய காரணம், 'கும்பமேளா'. உத்திரபிரதேசத்தில் நடந்த கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.
இதனால், ஏற்பட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர்.
அடுத்ததாக, ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் இன்ஜின்களில் பொருத்தப்படும் கேமராவில் மைக்ரோ போன் பொருத்தப்பட உள்ளது.
இன்னும் புதிய திட்டங்கள் ரயில்வே துறையில் கொண்டுவரப்பட உள்ளது.