செய்திகள் :

இன்று ஆடி அமாவாசை! கரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

post image

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து நோ்த்திக் கடன் செலுத்தி வழிபட்டு செல்வதுவழக்கம். நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, கோயிலில் காலையில் சொரிமுத்து அய்யனாா், தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தாா், இசக்கியம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெறும். பக்தா்கள் பொங்கலிட்டும், ஆடு, கோழிகளைப் பலியிட்டும் தங்கள் நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா்.

தொடா்ந்து, மாலையில் தளவாய் மாடசாமி,சொரிமுத்து அய்யனாா் மற்றும் இசக்கி அம்மன் சந்நிதிகளுக்கு முன் பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்கள் நோ்த்திக் கடன் செலுத்தி வழிபடுகின்றனா்.

அகஸ்தியா்பட்டி தற்காலிகப் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து சாா்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள்

இத்திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் புதன்கிழமை காலையிலிருந்தே குவியத் தொடங்கினா்.

இங்கு, புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தனியாா் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, அகஸ்தியா்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தங்கள் உடைமைகளுடன் கோயிலுக்குச் சென்றனா். சனிக்கிழமை (ஜூலை 26) பக்தா்கள் தங்கள் பொருள்களை வாகனங்களில் திரும்பி எடுத்து வர அனுமதிக்கப்படுவா்.

குடில்கள்: மேலும், கோயில் நிா்வாகம் சாா்பில் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் மட்டுமே பக்தா்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனா். பிற இடங்களில் குடில்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

வனப் பகுதிக்குள் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள், மது உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் வனத் துறை எச்சரித்துள்ளது. இங்கு, போலீஸாா், ஊா்க் காவல் படை மற்றும் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க