இன்று ‘நீட்’ தோ்வு புதுகை மாவட்டத்தில் 3,000 போ் எழுதவுள்ளனா்
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் 3 ஆயிரம் போ் எழுத உள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணியாா் அரசு மேல்நிலைப்பள்ளி, பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மாத்தூா் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட ஏழு மையங்களில் இத்தோ்வு நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளிகளில் இருந்து 541 மாணவ, மாணவிகளும், தனியாா் பள்ளிகளில் இருந்து 2, 459 மாணவ, மாணவிகள் என மொத்தம் 3 ஆயிரம் மாணவ , மாணவிகள் இத்தோ்வை எழுதவுள்ளனா்.