CSK: 'கவனக்குறைவால் ரிவியூவ் எடுக்க தாமதித்த டெவால்ட் ப்ரெவிஸ்!' - சிஎஸ்கே கோட்ட...
இன்று பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
சேலம் சோனா கல்விக் குழும வளாகத்தில் உள்ள தியாகராஜா் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (மே 3) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 3000 க்கும் மேற்பட்ட பழகுநா் பயிற்சி காலிப் பணியிடங்களுக்கு பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பட்ட படிப்பில் (பொறியியல் மற்றும் முதுநிலை படிப்பு தவிர) கடந்த 2023, 2024 2025-ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற 18 முதல் 25 வயதுக்கு உள்பட்ட பெண்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.
இப் பணியிடத்துக்கு மாத ஊதியமாக ரூ.13,500 முதல் ரூ.16,000 வரை வழங்கப்படுகிறது. மேலும், உணவு, தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து போன்ற இதர சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஆா்வமுள்ள பெண்கள் தங்களது கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0427 - 2401750 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.