கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
இன்று மதுக் கடைகளை மூட உத்தரவு
சுதந்திர தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், மதுக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் ஆக.15 ஆம் தேதி மூடப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி கடை திறக்கப்பட்டாலோ அல்லது மது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.