Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ்...
இன்று 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூலை 29, 31) 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மேலும், பயணிகளின் வசதிக்காக 13 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கபடும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களில் செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூலை 29, 31) காலை 9.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதன்காரணமாக அந்த நாள்களில் சென்ட்ரலிலிருந்து காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 மணிக்குப் கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகா் மின்சார ரயில்களும், காலை 10.15 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.10, 9.55, 11.25, பகல் 12, பிற்பகல் 1 மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 10 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படும். அதேபோல், அந்நாள்களில் கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரை செல்லும் ரயில் என மொத்தம் 14 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூலை 29, 31) சென்ட்ரலிலிருந்து காலை 8.05, 9, 9.30 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 10.30 மணிக்கு எண்ணூருக்கும், காலை 11.35 மணிக்கு மீஞ்சூருக்கும் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து காலை 9.27, 10.13 மணிக்கும், மீஞ்சூரிலிருந்து காலை 11.56, பிற்பகல் 1.13 மணிக்கும், எண்ணூரிலிருந்து பிற்பகல் 12.43 மணிக்கும் சென்ட்ரலுக்கு ரயில்கள் இயக்கப்படும்.
மேலும், கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு மீஞ்சூருக்கும், பொன்னேரியிலிருந்து காலை 11.13 மணிக்கு கடற்கரைக்கும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.20 மணிக்கு சென்ட்ரலுக்கு என மொத்தம் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.