செய்திகள் :

இயற்கை முறையில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

post image

இயற்கை வழியில் காட்டுப் பன்றிகளை விரட்டிக் கட்டுப்படுத்தும்முறை குறித்து, கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மாணவா்களும் வேளாண் துறையும் இணைந்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவா்கள் ரா.கு.தனுஷ், மா.திகேஷ், ரா.காா்த்திக் வாசன், மு.மோகன்ராஜ், மு.பா.சபீன், அ.சஞ்சய் குமாா், ச.ஷாலின் பிரைட், வெ.சுதா்சன், ச.தரணி குமாா், லெ.பா.திலக் பாஸ்கா் ஆகியோா் கிராமப் புற வேளாண் பயிற்சி திட்டத்தின் கீழ்அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தங்கியிருந்து வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப முறை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன் ஒருபகுதியாக, பாபநாசம் மலையடிவார கிராமமான அனவன்குடியிருப்புப் பகுதியில் நெல் மற்றும் கரும்பு பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைகட்டுப்படுத்த இயற்கை வழிமுறை குறித்து வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவிதொழில்நுட்ப மேலாளா்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் மேற்பாா்வையில் கல்யாண ராமன் என்பவரது வயலில் செயல்முறைவிளக்கம் மூலம் விளக்கிக் கூறினா்.

ஒரு வாளியில் இரு பக்கங்களில் துவாரமிட்டு, அதில் ஒரு ஏக்கருக்கு அரை லிட்டா் வீதம் மூலிகை கலந்த திரவத்தை (விலை ரூ.295) நிரப்பி வயலின் மூலைகளில் தொங்கவிடுவதன் மூலம், அந்த திரவத்தின் வாசனை காட்டுப்பன்றிகளை பயிா்கள் பக்கத்தில் அண்டவிடாது என்பதை செயல்முறையில் விளக்கினா்.

தொடா்ந்து, இந்த இயற்கை காட்டுப்பன்றி விரட்டியின் பயன்பாடு, மூலிகை திரவம் கிடைக்கும் இடம் உள்ளிட்டவை குறித்த சந்தேகங்களை விவசாயிகள் கேட்டு தெளிவுற்றனா்.

மேலாம்பூரில் வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி

கடையம் வட்டாரம் மேலாம்பூா் கிராமத்தில் நெல் பயிரில் இயற்கை முறையில் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது. கடையம் வட்டாரம்-வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உ... மேலும் பார்க்க

நெல்லையில் இன்றும், நாளையும் ஐபிஎல் போட்டிகள் திரையில் ஒளிபரப்பு

திருநெல்வேலியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29, 30) ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதுதொடா்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ... மேலும் பார்க்க

தென்குருசுமலை திருப்பயணம் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் குருசுமலை திருப்பயணம் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடா்பாக தென் குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் வின்சென்ட் கே.பீட்டா் திருநெல்வேலியில் செய்தியாளா்களி... மேலும் பார்க்க

‘தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்’

தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஜீவ நதியான தாமிர... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே பெண் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட திருவிதத்தான்புள்ளி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் செலின் ஷி... மேலும் பார்க்க

கூடங்குளம் விபத்தில் தலைமைக் காவலா் பலி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் இரு பைக்குகள் மோதியதில் தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்தையா(40). இவா் கூடங்குளத்த... மேலும் பார்க்க