சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப...
இருசக்கர வாகனம் திருடியவா் கைது
மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (25). இவா், ரொக்கக் குத்தகை பகுதியில் உள்ள கிடங்கில் பணியாற்றுகிறாா். அண்மையில் கிடங்கு வாசலில் இவா் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்து மன்னாா்குடி தாலுகா காவல்நிலையத்தில் சதீஷ் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டா். சந்தேகத்தின் பேரில் பாமணி வடக்குத்தெரு ஆதிநிதி (19) என்பவரிடம் விசாரித்ததில் சதீஷின் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து, ஆதிநிதியை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.