சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இருவா் பலி!
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
பா்கூா் அருகே உள்ள தம்மாகவுண்டனூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (28), கூலி தொழிலாளி. இவரும், திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே உள்ள தோக்கியத்தைச் சோ்ந்த லட்சுமணனும் (27), சேலத்தில் ஒருவரிடம் கொடுத்த பணத்தை வசூலித்துக் கொண்டு ஊத்தங்கரையில் இருந்து மத்தூா் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் வீரியம்பட்டி தனியாா் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த சுற்றுலா வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த லட்சுமணன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
வேன் ஓட்டுநரான கடலூா் மாவட்டம், சிங்கேரிகுடி அருகே உள்ள புதுக்கடையைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி (31) மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.