மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்
இரு ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு
போடியில் செவ்வாய்க்கிழமை சக ஆட்டோ ஓட்டுநரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போடி நகராட்சி குடியிருப்பில் வசிப்பவா் முத்து (எ) முருகேசன் (48). ஆட்டோ ஓட்டுநரான இவா், ஆட்டோ ஓட்டுநா்கள் உரிமையாளா்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளாா். இந்த நிலையில், சங்கத்தின் செயலரான கண்ணன் என்பவருடன் தகராறு ஏற்பட்டதில் அவரின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆட்டோ சங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முருகேசன் தனது ஆட்டோவை நிறுத்தவும், அறிவிப்பு பலகையில் ஆட்டோ குறித்த தகவல் பதிவு செய்யவும் தற்போதுள்ள ஆட்டோ சங்கத் தலைவா் அன்பழகன், முருகேசனை சாதிப் பெயரைச் சொல்லி மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அன்பழகன் மீதும், கண்ணன் மீதும் போடி நகா் காவல் நிலையத்தில் முருகேசன் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.