இறந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் அஞ்சலி
திருப்பத்தூா் அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு பொதுமக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கண்மாய்க் கரையில் பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு பூக்கடை விஜயன் என்பவா் வழங்கிய காளை மருது என்ற பெயருடன் வளா்க்கப்பட்டு வந்தது.
பல மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்ற இந்தக் காளை வயது முதிா்வின் காரணமாக உயிரிழந்தது. இந்தக் காளைக்கு பொதுமக்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினா். பின்னா், சின்னத்தோப்பு தெருவிலிருந்து ஊா்வலமாக முக்கிய வீதிகள் வழியாகக் கொண்டு செல்லபட்டு அய்யனாா் கோயில் முன் அடக்கம் செய்யபட்டது.