Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்...
இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த வேதாளை பகுதியிலிருந்து இலங்கைக்கு பொருள்கள் கடத்தவிருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சரவணக்குமாா், சங்கா், ராஜதுரை, கணேஷ் உள்ளிட்டோா் வேதாளை கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, குறிப்பிட்ட வீட்டை சோதனையிட்ட போது, அங்கு 41 சாக்கு மூட்டைகளில் 1,722 கிலோ விரலி மஞ்சளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றை பறிமுதல் செய்து, மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.