செய்திகள் :

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் கைது!

post image

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இலங்கை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் அதிபர், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச மீதான சொத்துக்குவிப்பு புகாரில் அந்த நாட்டின் குற்றப் புலனாய்வு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்த வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு யோஷித ராஜபக்சவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்?

இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில், பணமோசடி சட்டத்தின் கீழ் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் உறுதியானதையடுத்து யோஷித ராஜபக்ச இன்று பெலியட்டா பகுதியில் சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனைக்குப் பிறகு யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு விரைவில் நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் தகவல்

பாகிஸ்தானுடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இஸ்லாமாபாதில் உள்ள வங்கதேச தூதா் கூறியுள்ளாா். வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டம் மூலம் பிரதமா... மேலும் பார்க்க

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினுடன் விரைவில் பேச்சு: டிரம்ப் அறிவிப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் விரைவில் பேசவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். மேலும், இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் (சுமாா் 907 கிலோ) வெடிகுண்டு... மேலும் பார்க்க

பிரிட்டன் ஆதிக்கம் நிறுவப்பட்ட தினத்தை கொண்டாடிய ஆஸ்திரேலியா: பூா்வகுடி மக்கள் எதிா்ப்பு

’ஆஸ்திரேலிய தினம்’ ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு அந்நாட்டின் பூா்வகுடி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா். கடந்த 1788-ஆம் ஆண்டு ஜனவரி 26-இல் ஆஸ்திரேலியாவில் பிரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: லெபனானில் 15 போ் உயிரிழப்பு 80-க்கும் மேற்பட்டோா் காயம்

இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், லெபனானில் ஞாயிற்றுக்கிழமை 15 போ் உயிரிழந்தனா்; 80-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே த... மேலும் பார்க்க

சா்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபா் புதின் புகழாரம்

சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா். நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்... மேலும் பார்க்க

சூடான் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 போ் உயிரிழப்பு; 19 போ் காயம்

சூடானின் எல்-ஃபஷா் நகரத்தில் இயங்கிவரும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 70 போ் உயிரிழந்தனா். 19 போ் காயமடைந்தனா். சூடானில் சுமாா் 30 ஆண்டுகளாக சா்வாதிகார ஆட்சி செய்து வந்த அதிபா் ஒமா் அல்-... மேலும் பார்க்க