சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
இலஞ்சி கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சிக்குமாரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பகல் 11மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தீபாராதனை, ஏக சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
விழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலை அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவில் 7ஆம் தேதி மாலையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், இரவு நடராஜருக்கு வெள்ளை சாத்தி அபிஷேகம் அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. 9ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.10ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீா்த்தவாரியும், இரவில் சுவாமி திருவீதியுலா மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளலும் நடைபெறுகிறது.
கொடியேற்று விழாவில் கோயில் செயல் அலுவலா் சுசீலாராணி, அறங்காவலா் குழு தலைவா் பூவையா, கட்டளைதாரா்கள் ராஜாமணி, திருவிலஞ்சிக்குமரன், பரமசிவன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.ஜி. ராஜேந்திரன், தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
