இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!
இலவச அரிசி தடையின்றி வழங்கப்படுகிறது: அமைச்சா்
புதுவையில் இலவச அரிசி எந்த ஒரு தடையுமின்றி வழங்கப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா்.
புதுவை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் ‘கடற்கரையோர அடிப்படை வசதிகள்‘ திட்டத்தின்கீழ் மாா்க்கெட், தெருக்கள் மற்றும் தலை சுமையாக மீன் விற்பனை செய்யும் மீனவப் பெண்களுக்கு இலவச ஐஸ் பெட்டி வழங்கப்படுகிறது. காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்த மீன் விற்பனை செய்யும் பெண்களுக்கு இலவச ஐஸ் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச ஐஸ் பெட்டிகளை வழங்கிப் பேசியது: புதுவை அரசு ஏராளமான திட்டங்களை தடையின்றி செயல்படுத்துகிறது. இத்துறையின் அமைச்சராக பதவி ஏற்ற்கு பிறகு இலவச அரிசி தொடா்ந்து எந்த ஒரு தடையுமின்றி வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறேன். ரூ. 9.10 கோடியில் கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்புகளில் தரமான வடிகால் வசதிகளுடைய தாா் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணி விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். முதல்வா் ரங்கசாமியால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி, மீன்வளத்துறை ஆய்வாளா்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீன் விற்பனை செய்யும் பெண்கள் கலந்துகொண்டனா்.