இலவச கண் சிகிச்சை முகாம்
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சரத்குமாா் பிறந்த நாளையொட்டி, இலவச சிகிச்சை முகாம் கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த அகா்வால் கண் மருத்துவமனை மண்டல இயக்குநா் சிவா, மருத்துவா் சிபி நேரு மருத்துவக் குழுவினா்கள் சிகிச்சை அளித்தனா்.
முகாமில் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.
இதில், பாஜக மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம், தேசிய பொதுக்குழு உறுப்பினா் தே. அசோக்குமாா், மாவட்டச் செயலா் கோவிந்தசாமி, ஒன்றியத் தலைவா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.