தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!
இலுப்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வியாழக்கிழமை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இலுப்பூா் அடுத்த மாரப்பட்டியை சோ்ந்தவா் துரைச்சாமி (41). விவசாயியான இவா் தனது வியாழக்கிழமை காலை தனது வயலுக்குச் சென்றபோது வரப்பின் மீது இருந்த புற்களுக்கு நடுவே அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் துரைச்சாமி சடலத்தை மீட்டு இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு உடற்கூறாய்வு செய்யும் மருத்துவா் பணி முடித்துச் சென்றுவிட்டதால் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் ஏற்பாட்டின்பேரில் புதுகை மருத்துவக் கல்லூரியில் இருந்து வந்த மாற்று மருத்துவா் மூலம் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.