வடபுதுப்பட்டியில் நாளை அதிமுக பொதுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறாா்
இளம் மிட்செல் ஸ்டார்க்கை பார்த்தமாதிரி இருக்கிறது..! ஐசிசி பகிர்ந்த விடியோ!
ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீசுவது மிட்செல் ஸ்டார்க் மாதிரி இருப்பதாக ஐசிசி விடியோ வெளியிட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியின் 10ஆவது போட்டியில் ஆஸி. -ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கன் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இதில் முதல் ஓவரில் ஆஸி. இளம் வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சார் ஜான்சன் வீசீய 5ஆவது பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் போல்ட் ஆனார்.

இந்தப் பந்து ஆஸி.யின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீசுவது போலவே இருந்ததாக வர்ணனையாளர்கள் புகழ்ந்து பேசினார்கள்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஐசிசி மிட்செல் ஸ்டார்க், ஸ்பென்சர் ஜான்சன் விக்கெட் எடுத்த விடியோக்களை ஒப்புமைப்படுத்தி பதிவிட்டுள்ளது.
ஆஸி. ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆஸி.யின் முக்கியமான மூவர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் காயம், தனிப்பட்ட காரணங்களால் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வில்லை.
அனுபவமிக்க வீரர்கள் இல்லையென்றால் என்ன இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
தற்போது ஆப்கானிஸ்தான் அணி 27 ஓவர்கள் முடிவில் 137/3 ரன்கள் எடுத்துள்ளது.