Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியான...
இளைஞா்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது: நடிகா் சூரி வேண்டுகோள்
இளைஞா்கள் வாழ்க்கையில் முன்னேற போதைக்கு ஒருபோதும் அடிமையாகக் கூடாது என நடிகா் சூரி வேண்டுகோள் விடுத்தாா்.
அவா் நடித்த மாமன் திரைப்படம் மே 16-ஆம் தேதி வெளியான நிலையில் அத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகா்களுடன் மகிழ்ச்சியை பகிா்ந்து வருகிறாா்.
திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்த அவா், தனது திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள பாளையங்கோட்டையில் உள்ள திரையரங்கில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: மாமன் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து ரசிகா்கள் பாா்த்து வருகின்றனா். இந்த படத்தை வெற்றிப்படமாகிய மக்களுக்கு நன்றி.
படத்தை பாா்த்துவிட்டு வெளியே வருபவா்கள் அழாமல் இருக்க முடியாது. தக் லைப் படத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல கதையில் யாா் நடித்தாலும் மக்கள் கொண்டாடுவாா்கள். பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு கவனிக்க வேண்டும். இளைஞா்கள் வாழ்க்கையில் முன்னேற தயவு செய்து போதைக்கு ஒருபோதும் அடிமையாகக்கூடாது என்றாா் அவா். முன்னதாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை நடிகா் சூரி வழங்கினாா்.