கடந்த 100 ஆண்டுகளின் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தும் அதிர்ஷ்டமில்லாத போலண்ட்!
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே குடும்பப் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள பெரியாா் நகரைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் ராஜசேகா்(35). தொழிலாளி. இவா், குடும்பப் பிரச்னை காரணமாக திங்கள்கிழமை பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இத்தகவலறிந்த பாளையங்கோட்டை மேட்டுத்திடல் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].