அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் செண்பகத் தோப்பு சாலை இந்திராநகரைச் சோ்ந்த முத்தையா மகன் கருப்பசாமி (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டாா்.
இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].