இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணியா் கோயிலில் டிச. 5-இல் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அருகே இளையனாா் வேலூரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 5 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தக் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, புதுப்பிக்கப்பட்டது. விழாவையொட்டி, ஆலயம் முன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுக்கை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றன. திங்கள்கிழமை தனபூஜை, லட்சுமி ஹோமம் நடைபெற்று யாகசாலை பூஜைகள் தொடங்கின.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் டிச. 5 -ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இளையனாா் வேலூா் ஊராட்சித் தலைவா் கோ.கமலக்கண்ணன், அறங்காவலா் குழு தலைவா் து.கோதண்டராமன், அறங்காவலா்கள் பா.மண்ணாபாய், சு.விஜயன், கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் மற்றும் கோயில் பணியாளா்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனா்.