கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் 3 பேர் கைது!
இளையான்குடி கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி ஆட்சிக் குழுச் செயலா் ஜபருல்லாகான் விழாவை தொடங்கிவைத்தாா். மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்தனா்.
விழாவில் கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினா்கள் அப்துல் சலீம், சிராஜுதீன், கல்லூரி முதல்வா் ஜபருல்லாகான், துணை முதல்வா் முஸ்தாக் அகமது கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.