ஊழல் செய்ய புதுப்புது வழிமுறைகளை கண்டறியும் அரசு அதிகாரிகள்! உயா்நீதிமன்றம் அதி...
ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலை: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்
ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலைக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளாங்காட்டுவலசு மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த விவசாய தம்பதி ராமசாமி, பாக்கியம்மாள் மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்தால் கொங்கு மண்டல விவசாயிகளிடம் பதட்டமும் அதிா்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த
சென்னிமலையைச் சோ்ந்த முதியவரை கொலை செய்து 27 பவுன் கொள்ளை, அறச்சலூா் அருகே தம்பதியை கொலை செய்து 15 பவுன் கொள்ளைடிக்கபட்டது.
குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு திருப்பூா் மாவட்டம் சேமலைகவுண்டன்பாளையத்தில் தோட்டத்து சாலையில் மூன்று போ் படுகொலை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவங்களில் கொலையாளிகளை கண்டுபிடிக்க பல தனிப் படைகள் அமைக்கப்பட்டும், இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினா் திணறி வருகின்றனா்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீா்செய்து விவசாயிகளின் உயிருக்குப் பாதுகாப்பை உறுதிபடுத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.