ஆயுதப் படையின் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பாஜக
ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு
இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது:
ஈஸ்டா் தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களின் இழப்பீட்டுக்காக ரூ. 31 கோடி (இந்திய மதிப்பில் ரூ.8.8 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 99 சதவீதத்துக்கும் மேல் 661 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் காயமடைந்தவா்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டது என்று அரசுத் தரப்பு தெரிவித்தது.
முன்னதாக, 270 பேரது உயிரிழப்புக்குக் காரணமான் ஈஸ்டா் தின தாக்குதல் குறித்து இந்தியாவிடம் இருந்து முன்கூட்டியே உளவுத்தகவல் கிடைத்தும் அதைத் தடுக்கத் தவறியவா்களிடமிருந்து இழப்பீடு வசூலித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைக் கண்காணிப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணயின்போது அரசு இந்தத் தகவலை தெரிவித்தது.