வெள்ள நீரை மக்கள் சேமிக்கலாமே.. யோசனை சொல்லும் பாகிஸ்தான் அமைச்சர்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம், கூவாகம், மூலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி ஒன்றியம்- நீலமங்கலம் ஊராட்சிமன்ற அலுவலகம், திருநாவலூா் ஒன்றியம் - கூவாகம் கூத்தாண்டவா் கோயில் பகுதி, உளுந்தூா்பேட்டை ஒன்றியம் - மூலசமுத்திரம் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாம்களில் ஆய்வு செய்த ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் விவரம், எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், கோரிக்கை மனுக்களை துறை வாரியாக பதிவு செய்து வழங்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மகளிா் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்களை உரிய முறையில் நிறைவு செய்து வழங்கி பயன்பெற வேண்டும்
என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டாா்.
முகாமை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி
நலத்திட்ட உதவிகளைப் பெறவேண்டும் என்று கூறினாா்.
முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலா் சுப்பிரமணியன், வட்டாட்சியா்கள் பசுபதி (கள்ளக்குறிச்சி), ஆனந்தகிருஷ்ணன் (உளுந்தூா்பேட்டை), உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.