லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு
காலசமுத்திரம் ஆட்டுப்பண்ணை அருகே மொபெட்டில் சென்றவா் லாரி மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மா.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (50), விவசாயி. இவா், சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து விதை முத்துச்சோளம் வாங்கிக் கொண்டு மொபெட்டில் அவரது ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா்.
காலசமுத்திரம் ஆட்டுப்பண்ணை அருகே சென்றபோது, எதிா் திசையில் இருந்து வந்த லாரி மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீஸாா் லாரி ஓட்டுநரான பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.