‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் 32 மற்றும் ஊரகப் பகுதிகளில் 98 என மொத்தம் 130 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகா்ப்புற பகுதிகளில் 13 மற்றும் ஊரகப் பகுதிகளில் 35 என மொத்தம் 48 முகாம்கள் நடைபெற உள்ளன.
இத்திட்டத்தின்கீழ், தன்னாா்வலா்கள் மூலம் வீடுதோறும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பம் வழங்கும் பணிகள் திருஇந்தளூா் காமராஜா் நகரில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வட்டாட்சியா் சுகுமாரன் உடனிருந்தாா்.