உடன்குடி அனல்மின் நிலைய சோதனை ஓட்டத்தில் விபத்து: 3 தொழிலாளிகள் காயம்
உடன்குடி அருகே கல்லாமொழியில், அனல்மின் நிலைய சோதனை ஓட்டத்தின்போது நேரிட்ட விபத்தில் 3 தொழிலாளிகள் காயமடைந்தனா்.
உடன்குடி அனல் மின் நிலையத்துக்கான முதல் அலகு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பெரிய சிம்னி குழாயிலிருந்து அதிக புகை வந்துகொண்டிருக்கிறது.
இங்கு செவ்வாய்க்கிழமை மாலை, கொதிகலனிலிருந்து செல்லும் நீராவிக் குழாய் உடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களான அமீத்குமாா் (26), பிரீத்தம் மண்டல் (21), பிஸ்வநாத் (20) ஆகிய 3 போ் காயமடைந்தனா். அவா்கள் திருச்செந்தூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.