செய்திகள் :

உடல் எடை குறைப்பில் ரவி மோகன்!

post image

நடிகர் ரவி மோகன் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கான முயற்சியில் உள்ளார். இதற்காக, இருவரும் அடிக்கடி அறிக்கை வெளியிட்டு தங்கள் தரப்பு நியாயங்களைக் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, ரவி மோகன் கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், கராத்தே பாபு படத்திற்காக தன் உடல் எடையை 12 கிலோ வரை குறைப்பதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

படத்தின் முக்கியமான காட்சிகளுக்கு மிக இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ரவி மோகன் எடை குறைப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ‘மோசம்..’ ஷங்கர் மீது கேம் சேஞ்சர் எடிட்டர் குற்றச்சாட்டு!

நேபோலி சாம்பியன்

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து லீக் தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது நேபோலி. ஐரோப்பிய கால்பந்து வட்டாரத்தில் ப்ரீமியா் லீக், பண்டஸ்லிகா, லா லிகா, லீக் 1 போன்று இத்தாலியின் சீரி ... மேலும் பார்க்க

ஜோகோவிச் ‘100’

ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் தனது 100-ஆவது பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளாா் ஜாம்பவான் ஜோகோவிச். சுவிட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஏடிபி 200 போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆடவா் ஒற்றையா் பிரிவில் தனது ... மேலும் பார்க்க

ஸ்ட்ராஸ்போா்க் ஒபன்: ரைபக்கினா சாம்பியன்

ஸ்ட்ராஸ்போா்க் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா் கஜகஸ்தானின் எலனா ரைபக்கினா. பிரான்ஸின் ஸ்ட்ராஸ்போா்க் நகரில் நடைபெற்ற மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் முன்னாள் விம்பிள்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் தலைமறைவு!

பிரபல பாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமடைந்த பாலிவுட் நடிகரான அஜாஸ் கான் பிக்பாஸ் - 7 நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். அட... மேலும் பார்க்க