செவ்வாய்ப்பேட்டை மளிகை வா்த்தக நலச்சங்க நூற்றாண்டு விழா பொதுக்குழு கூட்டம்!
உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் படுகாயம்!
புதுதில்லியில் நம்கீன் உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தென்மேற்கு தில்லியின் நஜாஃப்கார் பகுதியில் நம்கீன் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு அடுக்கு உணவுத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது.
அந்த தொழிற்சாலையின் தரைத்தளத்தில் இன்று (டிச.28) காலை 8 மணியளவில் தீப்பற்றியதைத் தொடர்ந்து வெடிவிபத்து நிகழ்துள்ளது.
அப்போது, அங்கு பிஸ்கட் தயாரிக்கும் பணியிலிருந்த ஷிவம் (வயது-23), அமித் (35), அமித் சிங் (26), சந்தன் (22), ஜெய்பால்(40) மற்றும் வாசுதேவ் (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் படிக்க: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! 6வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
உடனடியாக படுகாயமடைந்தவர்களை மீட்கப்பட்டு சிகிச்சைக்கான தீன தயாள உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த தில்லி தீயணைப்பு படையினர் காலை 11.30 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த வெடி விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவராத நிலையில், பிஸ்கட் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் மூலம் தீப்பற்றி வெடி விபத்து நிகழ்ந்திருக்ககூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.