'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்...
உதகை வேலி வியூ பகுதியில் உலவிய யானை
உதகை, வேலி வியூ பகுதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை உலவிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி, பிரகாசபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளும், விளைநிலங்களும் உள்ளன.
இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.
அதன்படி, வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய ஒற்றை யானை வேலி வியூ பகுதி சாலையில் உலவியது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானை வனத்துக்குள் விரட்டினா்.