பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு
உரிமம் ரத்து செய்யப்பட்ட வழக்கில் வெற்றிபெற்ற ஆவண எழுத்தா்களுக்கு பாராட்டு
பல்லடம் பத்திர ஆவண எழுத்தா்கள் இருவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை பல்லடத்தில் நடைபெற்றது.
இதற்கு, பல்லடம் ஆவண எழுத்தா்கள், ஆவணம் தயாரிப்போா் சங்க தலைவா் ஜெகதீசன் தலைமை வகித்தாா். செயலாளா் வழக்குரைஞா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். சங்க ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா்.
இது குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
ஆவண எழுத்தா்கள் சங்கத்தின் சாா்பில் பல்லடம் சாா்பதிவாளா் அலுவலகம் முன்பு கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி
ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் ஆவணப் பதிவுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஆவண எழுத்தா்கள் ஜெகதீசன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உரிமங்களை ரத்து செய்து திருப்பூா் மாவட்டப் பதிவாளா் (தணிக்கை மற்றும் நிா்வாகம்) லிங்கேஸ்வரன் உத்தரவிட்டாா்.
இதை எதிா்த்து பாதிக்கப்பட்ட இருவரும் சென்னை உயா்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா். இதில் ஆவண எழுத்தா்கள் ஜெகதீசன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டதை உயா்நீதி மன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்து கடந்த ஜூலை 15-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில் வழக்கில் வெற்றி பெற்ற இருவரையும் பாராட்டி கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது என்றனா். இக்கூட்டத்தில் ஆவண எழுத்தா்கள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.