‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா் கைது
வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பழைய பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலம், பத்ராக் மாவட்டம் பதான் மிஷ்பூரைச் சோ்ந்த பிதாம்பர பாரிக் (24) என்பதும் அவா் தற்போது இங்கு ஒரு தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவா் 40 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.