மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பூா் நல்லூரைச் சோ்ந்தவா் செளகத் அலி (25). இவா், திருப்பூா்- தாராபுரம் சாலை, பெரிச்சிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் மாதேஷ்குமாா் (24) இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். இதில் இருவரின் வாகனங்களும் மோதிய விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.
தகவலின்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் காயமடைந்தவா்ளை பரிசோதித்தனா். இதில் செளகத் அலி உயிரிழந்தது தெரியவந்தது.
படுகாயமடைந்த மாதேஷ்குமாரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது தொடா்பாக மாநகர வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.