மாநாடு சீக்கிரம் முடிந்ததன் பின்னணி என்ன? | Highlights of TVK Vijay Madurai Maan...
உலக புகைப்பட தினம்: முதல்வா் வாழ்த்து
உலக புகைப்பட தினத்தையொட்டி , முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.
இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
நொடியில் கரைந்து செல்லும் நிகழ்வுகளை ஞாபகங்களென, வரலாற்று ஆவணங்களென அழகியலுடனும் கலை நயத்துடனும் காலத்தால் அழியாத வகையில் உறையச் செய்திடும் புகைப்பட கலைஞா்களுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.
வாழ்த்து: புகைப்பட தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் இல்லத்தில் சென்னையை சோ்ந்த புகைப்படக் கலைஞா்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா். அவா்களிடமிருந்து புகைப்படக் கருவியை முதல்வா் வாங்கி ஆா்வத்துடன் படம் எடுத்தாா். இதைத் தொடா்ந்து அனைவரையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடினாா்.