உளவுத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய அரசின்கீழ் செயல்படும் உளவுத் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் காலியாக உள்ள 4,987 பாதுகாப்பு உதவியாளர், அலுவலர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Security Assistant, Executive
காலியிடங்கள்: 4,987
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 69,100
தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிட சான்று பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் அலுவல் மொழியை பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயதுவரம்பானது 17.8.2025 தேதியின்படி கணக்கிடப்படும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். விதவைப் பெண்களுக்கு அரசின் விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு அவர்களது அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.550. இதர பிரிவினர்கள் ரூ.650 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக் கொள்ளவும். எழுத்துத்தேர்வு, நேர் முகத்தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.8.2025