பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டம் தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், அணைக்கரையில் துணை விரிவாக்க மைய அலுவலகம் மற்றும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வழியாக வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஜி. வித்யா, துணை இயக்குநா் சு. அய்யம்பெருமாள், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் வெங்கட்ராமன், திருப்பனந்தாள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பா. காா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா். அப்போது விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்துகள் மற்றும் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.