செய்திகள் :

ஊட்டி: காட்டுக்குள் கிடந்த மனித காது; பின் தொடர்ந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள கவர்னர் சோலை பகுதி தோடர் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கேந்தர் குட்டன்‌. 40 வயதான இவர் நேற்று மாலை முதல் திடீரென காணாமல் போன நிலையில், கிராம மக்கள் அவரை தேடி அலைந்துள்ளனர். இரவு நீண்ட நேரமாக தேடியும் கேந்தர் குட்டனை கண்டறிய முடியவில்லை என்பதால், அருகில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை மீண்டும் தேடச் சென்றுள்ளனர். காட்டுக்குள் மனித காது ஒன்று துண்டித்து கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் அருகிலியே உடலை இழுத்துச் சென்றதற்கான தடயம் தென்பட்டிருக்கிறது.

புலி தாக்குதல்

அந்த தடத்தைப் பின்தொடர்ந்து சென்ற நிலையில் சில மீட்டர்கள் தொலைவில் கேந்தர் குட்டனின் பாதி உடல் கிடப்பதைக் கண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர். காவல்துறை மற்றும் வனத்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பகுதிக்குச் சென்று கேந்தர் குட்டனின் உடலை மீட்ட அரசுத் துறையினர் , புலியால் தாக்கி கொல்லப்பட்டு பாதி உடல் உண்ணப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறையினர், "விறகு சேகரிக்க காட்டுக்குள் வந்த நபரை புலி தாக்கியிருக்கக் கூடும். அவர் உடலின் கை, மார்பு உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர மற்ற பாகங்களைத் தின்றிருக்கிறது. வயது முதிர்வு அல்லது வேட்டைத்திறன் இழப்பு காரணமாக மனித வேட்டையில் அந்த புலி ஈடுபட்டிருக்கலாம். குறிப்பிட்ட அந்த புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

புலி தாக்குதல்

சில கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுப்பதாக கூறினர். அது குறித்தும் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ‌. இழப்பீடு வழங்கவும் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்கொள்ளல் நடந்த சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம்" என்றனர்.

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க

Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி

மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர். கட... மேலும் பார்க்க

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற... மேலும் பார்க்க

கள்ள நோட்டல்ல, கலர் நோட்டு - தப்பிய விசிக கடலூர் மாவட்ட பொருளாளர்; சிக்கிய துப்பாக்கிகள் - பின்னணி?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவரும் ஆவட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர... மேலும் பார்க்க

நெல்லை: 3 மாதங்களில் 41 பேருக்கு ஆயுள் தண்டனை; வழக்குகளை முடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸார்

தென் மாவட்டங்களில் பதற்றமான ஊர்கள் நிறைந்தது நெல்லை மாவட்டம். ஆனால், போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, குற்றவாளிகளை கைது செய்தல், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருதலில் போலீஸார் ஒருங்கிணைந்து திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிய இயக்குநர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் சமீபத்தில் நடந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்பனை செய்து மோனலினா போஸ்லே என்ற பெண் பிரபலம் அடைந்தார். அப்பெண் சமூக வலைத்தளத்தில் பிரபலம் அடைந்ததால், அவர் இப்... மேலும் பார்க்க