செய்திகள் :

ஊட்டி: வீட்டு வாசலில் கஞ்சா சாகுபடி; மான் கறியில் உப்புக் கண்டம்; வனத்துறை சோதனையில் அதிர்ச்சி தகவல்

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கீழ் சேலதா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வித்தியாசமான செடிகளை வளர்த்து வருவதாகவும், அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும் அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்குத் தகவல் தெரித்திருக்கிறார்கள்.

கஞ்சா செடிகள்
கஞ்சா செடிகள்

சம்மந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் குழுவாகச் சென்று சோதனை செய்துள்ளனர். வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் காய வைத்த மான் இறைச்சி கத்தி போன்றவற்றையும் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னணி குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், "தேனாடுகம்பை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 64 வயதான கண்ணன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் ரகசியமாக 12 கஞ்சா செடிகளை வளர்த்து வந்திருக்கிறார். அதோடு 300 கிராம் கஞ்சாவும் வைத்திருந்தார்.

கைதான கண்ணன்
கைதான கண்ணன்

கஞ்சா செடிகள் அனைத்தும் அழிக்கப்பட்டது‌. மேலும் கடமானை வேட்டையாடி அதன் கறியை உப்புக் கண்டம் போட்டுப் பயன்படுத்தி வந்திருக்கிறார். 2 கிலோ மான் இறைச்சியும் 5 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

காவல்துறை மற்றும் வனத்துறை மூலம் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்‌ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே ... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை புகாரில் கைது: போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிய ஆம் ஆத்மி கட்சி எல்.எல்.ஏ

பஞ்சாப் மாநிலம், சனூர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் பதன்மஜ்ரா. இவர் மீது பெண் ஒருவர் போலீஸில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்புகாரில், `தனது மனைவிய... மேலும் பார்க்க

ஈரோடு: அமெரிக்காவின் வரியால் சலுகை விலையில் ஆடைகள்; விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு என்ன நடந்தது?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருப்பது, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை நீ... மேலும் பார்க்க

பீகார் டு கோவை... வழிப்பறி கும்பலிடம் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்!

கோவை மாவட்டம், சூலூர் அருகே சுகந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜூலியானா (47). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு 2 பேர் இருசக்கர வாகனத்தில் சிகரெட் வாங்குவது போல சென்ற... மேலும் பார்க்க

Ramya: `ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல்' - நடிகை ரம்யா புகாரில் 12 பேர் கைது!

கன்னட நடிகர் தர்ஷன் தன் ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற ஜாமீனை விமர... மேலும் பார்க்க

நெல்லை: தாயை அடித்துக் கொன்ற மகன்; திருமணம் மீறிய உறவால் நிகழ்ந்த கொடூரம்

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெஜினா. இவரது கணவர் பூல்பாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் ரெஜினா, தனது இரண்டு மகன்க... மேலும் பார்க்க