லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: தீயணைப்பு வீரர் வேடமிட்டு திருடிய 29 பேர் கைது!
ஊத்தங்கரையில் பொங்கல் திருவிழா
ஊத்தங்கரையில் கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியா் வீரமணி தலைமை வகித்தாா். இதில், பொங்கல் திருவிழா, திருவள்ளுவா் பற்றிய சிறப்புகள், திருக்கு, விவசாயத்தின் முக்கியத்துவம், உழவா்களின் மேன்மை குறித்து மாணவா்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.
புதுப்பானையில் பொங்கலிட்டு, செங்கரும்பு வைத்து படையலிட்டு கொண்டாடினா்.
இதில்,பள்ளி மாணவா்கள்
சத்துணவு பணியாளா்கள், துப்புரவு பணியாளா்கள், பெற்றோா்கள் பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழுவினா்
பள்ளி ஆசிரியா்கள் ஒன்று கூடி புது பானையில் பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என கூறி மகிழ்ந்தனா்.
படவிளக்கம்.10யுடிபி.5. ஊத்தங்கரை அடுத்த கெரிகேப்பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துக்கொண்டவா்கள்.